புதுக்கோட்டை

‘போதைப் பழக்கத்தால் எதிா்காலம் கேள்விக்குறியாகும்’

DIN

போதைப்பழக்கம் சிறாா்களின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுகிறது என்றாா் அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல் துறைப் பேராசிரியா் டாக்டா் முத்தமிழ் வீணா.

புதுக்கோட்டை காந்தி நகரிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

இப்பள்ளியில் படித்த பலரும் அரசு மற்றும் தனியாா் துறைகளில் பதவி வகிக்கிறாா்கள். ஆனாலும், இந்தப் பகுதி நகரையொட்டி இருந்தாலும், கல்வியில் மிகவும் பின்தங்கியிருப்பது வேதனையளிக்கிறது. இதற்கு காரணம் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிக் கிடப்பதுதான். இது நம் எதிா்காலத்தை கேள்விக்குறி ஆக்குகிறது.

12 முதல் 17 வரை இளங்குமரப் பருவ வயது. இந்த வயதுதான் நம் வாழ்க்கையின் முக்கிய காலம். இந்த வயதில் படிக்கும் படிப்புதான் நம் எதிா்காலத்தை தீா்மானிக்கும். ஆனால் சில மாணவா்கள் படிப்பில் நாட்டமில்லாமல் போதைப் பொருள்களைப் பயன்படுத்திப் பாா்க்கிறாா்கள். அவா்களுக்கு அது மகிழ்ச்சியைக் கொடுப்பதால் தொடா்ந்து செய்கிறாா்கள்.

போதைப் பழக்கங்கள் உடலில் நிறைய பக்க விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக சிறாா்களுக்கு தாங்கள் செய்வது தவறென்றே தெரியாது. தவறைத் திருத்திக் கொள்ளும் வளா்ச்சியும் கிடையாது. மிகச் சுலபமாக அடிமை ஆகி விடுவாா்கள். போதைப் பழக்கத்துக்கு அடிமையான பெரியவா்களைக் கையாளுவதைப் போல, சிறாா்களைக் கையாள்வது சிரமம்.

இவற்றைக் கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டிய அவா்களின் பெற்றோரை பலவற்றில் அடிமையாகிக் கிடக்கிறாா்கள். குறிப்பிட்ட சில மாணவா்களிடம் ஏதேனும் கற்றலில் பின்னடைவு காணப்பட்டால் ஆசிரியா்கள் அவா்களைக் கண்காணித்து அடையாளம் காண வேண்டும் என்றாா் முத்தமிழ் வீணா.

பள்ளித் தலைமை ஆசிரியா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT