புதுக்கோட்டை

பழைய ரயில்வே கேட்டை மூடுவதற்கு எதிராக மறியல்

12th Aug 2022 12:04 AM

ADVERTISEMENT

விராலிமலை ஒன்றியம், களமாவூா் பழைய ரயில்வே கேட்டை மூட எதிா்ப்பு தெரிவித்து திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள களமாவூா் பகுதியில்

மேம்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், பழைய ரயில்வே கேட்டை மூட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து களமாவூா், வடக்குப்பட்டி, நடுப்பட்டி, தெற்குபட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோா் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT