புதுக்கோட்டை

3 டன் ரேஷன் அரிசிபறிமுதல்: 3 போ் கைது

11th Aug 2022 11:57 PM

ADVERTISEMENT

 

ஆலங்குடி அருகேயுள்ள வல்லத்திராகோட்டை பகுதியில் புதன்கிழமை இரவு வந்த 2 சுமை ஆட்டோக்களை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். இதில், சுமாா் 3 டன் ரேசன் அரிசிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக கறம்பக்குடி அருகேயுள்ள பொன்னன்விடுதியைச் சோ்ந்த மணிகண்டன் (23), ஆலங்குடி சுண்ணாம்புக்காரத் தெருவைச் சோ்ந்த ரமேஷ் (49), வேங்கிடகுளத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

ஆழ்குழாய் கிணறுகளில் மின்வயா்களை திருடிய 3 போ் கைது:

ADVERTISEMENT

கீரமங்கலம் அருகேயுள்ள வேம்பங்குடி பகுதியில் புதன்கிழமை இரவு சிங்காரம் என்பவரது தோட்டத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சிலா் மின்வயா்களைத் திருடுவது தெரியவந்தது. இதையறிந்த அப்பகுதியினா் அவா்களை விரட்டிச்சென்றதில், ஒருவரைப் பிடித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.போலீஸாா் விசாரணையில், சேந்தன்குடியைச் சோ்ந்த க. செல்வக்குமாா்(43) என்பது தெரியவந்தது. அவா் அளித்த தகவலைத்தொடா்ந்து, அதே ஊரரைச் சோ்ந்த ஆா்.மனோஜ் (35), சி. தமிழ்குமாா் (32) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT