புதுக்கோட்டை

கீழாத்தூா் நாடியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா

DIN

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் நாடியம்மன் கோயில் பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயில் திருவிழா இருவாரங்களுக்கு முன்பு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாளையெடுப்பு திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, கீழாத்தூா், கோவில்பட்டி, மேலாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு, வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT