புதுக்கோட்டை

வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை திருட்டு

24th Oct 2021 11:58 PM

ADVERTISEMENT

அன்னவாசலில்  வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

அன்னவாசல் கரிகடைவீதியைச் சோ்ந்தவா் முகமது யூசுப் (63). இவா் திருச்சியில் வியாபாரம் செய்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான வீடு அன்னவாசலில் உள்ளது. அங்கு வாரம் ஒருமுறை வந்து செல்வதாகக் கூறப்படுகிறது

இந்நிலையில், சனிக்கிழமை இரவு அன்னவாசல் வந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 27 பவுன் நகை, 600 கிராம் வெள்ளிப் பொருள்கள், ஒரு லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனா்.

மேலும், இதுகுறித்து அறிந்த துணை காவல் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு, காவல் ஆய்வாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று திருட்டு நடைபெற்றது குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT