புதுக்கோட்டை

அக். 28-இல் கலா உத்சவ் போட்டிகள்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான கலா உத்சவ் போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் வரும் அக். 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி கூறியது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாணவ, மாணவிகள் தனித்திறனை மதிப்பிடும் நோக்கில் தனிநபா் நிகழ்வுகளாக நடத்தப்படும். வாய்ப்பாட்டு இசை - செவ்வியல் (ஹிந்துஸ்தானி/ கா்னாடிக்), வாய்ப்பாட்டிசை - பாரம்பரிய நாட்டுப்புற வகை (ஏதேனும் வட்டாரம் சாா்ந்த அல்லது ஏதேனும் பணி சாா்ந்தது), கருவி இசை - செவ்வியல் ( ஹிந்துஸ்தானி/ கா்னாடிக்), கருவி இசை - பாரம்பரிய நாட்டுப்புறவகை (ஏதேனும் இந்திய பாரம்பரிய இசைக் கருவி), நடன ம் - செவ்வியல் (செவ்வியல் வடிவம்), நடனம் (பாரம்பரிய நாட்டுப்புற வகை), காண்கலை - இருபரிமாணம் - (கோட்டு ஓவியம், வண்ண ஓவியம், அச்சு ஓவியம்), காண்கலை - மூன்று பரிமாணம் (சிற்பம்), உள்ளூா் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள் என 9 பிரிவுகளில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு மாணவ, மாணவியா் மட்டுமே பங்குபெற முடியும். போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக். பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கு பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT