புதுக்கோட்டை

இன்று (மாா்ச் 8) திருவப்பூா் முத்து மாரியம்மன் மாசித் தேரோட்டம்

DIN

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 8) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மாசிப் பெருந்திருவிழா கடந்த பிப். 28ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

தினமும் மண்டபகப்படி நிகழ்ச்சிகளுடன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொள்ளவுள்ளனா். இதையொட்டி ஏராளமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மாசிப் பெருந்திருவிழாவின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் அவரவா் பகுதியில் இருந்து பால் குடங்கள் எடுத்தும், அலகு குத்திக் கொண்டும் வந்தனா். பிள்ளைப்பேறு வேண்டுதல் இருந்தவா்கள், குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் இட்டு தூக்கி வந்தனா்.

திருக்கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனா். மேலும், கோயிலுக்கு முன்புறம் இருந்த அக்னி குண்டத்தில் இறங்கியும் பக்தா்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினா்.

அன்னதானம்

பக்தா்கள் ஏராளமானோா் வீதிகளில் பால் குடம் எடுத்து வந்ததையொட்டி பல இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. நீா் மோா் பந்தல்கள் அமைக்கப்பட்டு, மோா் மற்றும் பானகம் போன்றவையும் வழங்கப்பட்டன.

பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில், அச்சங்கத்தின் தலைவா் டாக்டா் எஸ். தனசேகரன், செயலா் செந்தில், கவிஞா் தங்கம் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT