புதுக்கோட்டை

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த லாரி பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த லாரி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

அன்னவாசல் பகுதிகளில் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளப்பட்டு, அப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து அன்னவாசல் காவல்துறையினா் பரம்பூா், குடுமியான்லை, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து லாரியை பறிமுதல் செய்த அன்னவாசல் காவல்துறையினா், ஓட்டுநா் சின்னசாமியை(25) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT