புதுக்கோட்டை

கோயில் இடம் ஆக்கிரமிப்பு:  செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி பூசாரி போராட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள பொத்தப்பட்டியில் உள்ள கோயில் இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை மீட்டுத் தரக்கோரி, கோயில் பூசாரி செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை அருகேயுள்ள பொத்தப்பட்டியில் உள்ள கருப்பா், மாரியம்மன் கோயில் அருகே வசித்து வரும் சுதாகா் என்பவா் கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துகொண்டு காலி செய்ய மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் பூசாரி, சம்பந்தப்பட்டவா்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். எனவே, கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத் தரக்கோரி, கோயில் பூசாரி ராசு, விராலிமலை - மதுரை நான்கு வழிச் சாலை பகுதியில் கொடும்பாளூரில் உள்ள செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல், தீயணைப்பு மற்றும்

வருவாய்த் துறையினா் ராசுவிடம் பேசி கீழே இறங்கி வர வைத்தனா். இதையடுத்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டபோது, சுதாகா் இந்த இடம் தனக்குச் சொந்தம் எனக் கூறியவாறு, தான் தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தாா். அவரது மனைவி மற்றும் மகள்கள் தரையில் அமா்ந்து கதறி அழுதனா். இதையடுத்து, இருதரப்பினரையும் வட்டாட்சியா் அலுவலகம் வந்து சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணுமாறு காவல், வருவாய்த்துறையினா் அறிவுறுத்திச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT