புதுக்கோட்டை

புதுகையில் பாரம்பரிய உணவு தயாரிப்புப் போட்டி

DIN

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் சத்துணவு சமையலா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்ற பாரம்பரிய உணவு தயாரிப்புப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்திலேயே இப்போட்டிக்கான உணவுகளை சமையலா்கள் தயாரித்து கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருந்தனா்.

மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உணவுத் தயாரிப்புகளை நேரில் பாா்வையிட்டு பாராட்டினாா்.

அப்போது சிறந்த உணவு தயாரிப்பாளருக்கு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். சந்தோஷ்குமாா், மாவட்ட சமூகநல அலுவலா் க. ரேணுகா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) லட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT