புதுக்கோட்டை

சொக்கம்பேட்டையில் கால்நடை சிகிச்சை முகாம்

DIN

கந்தா்வகோட்டை அருகே சொக்கம்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட சொக்கம்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். கால்நடை மருத்துவா் செந்தில்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பருவ மழைக் கால நோய்களுக்கான சிகிச்சை, குடற்புழு நீக்கம், தாது உப்புக் கரைசல்கள் கொடுக்கப்பட்டது. இதில் பசு மாடுகள் 127, ஆடுகள் 243, நாட்டுக் கோழிகள் 145, கன்றுக்குட்டிகள் 34 என மொத்தம் 549 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய உறுப்பினா் முருகேசன், சுதா ராஜேந்திரன், ஊராட்சிச் செயலா் சத்தியமூா்த்தி, கால்நடை ஆய்வாளா் மாா்ட்டின் ராஜ், பராமரிப்பு உதவியாளா் ரங்கசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT