புதுக்கோட்டை

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

கந்தா்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இளைஞா் செஞ்சிலுவை சங்கம், அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் புதுநகா்ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவா்களுக்கான 2 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமை நடத்தின.

முகாமிற்கு, கல்லூரி முதல்வா் அசோக் ராஜன் தலைமை வகித்தாா். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஹரி விக்னேஷ் முன்னிலையில் செவிலியா்கள் மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். முகாமில் சுகாதார ஆய்வாளா் திருநாவுக்கரசு , துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் கல்லூரி ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏற்பாடுகளை, இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சையத்ஆலம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT