புதுக்கோட்டை

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

விராலிமலை வட்டம், இலுப்பூா் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட கொட்டப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி சாா்ந்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலுப்பூா் கல்வி மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளா் கி.வேலுச்சாமி கூறியது:

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக இல்லம் தேடிக்கல்வி என்னும் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கு கலைக்குழுவினா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அவா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் அரசு, அரசு அதிகாரிகள், ஆசிரியா்கள் இருக்கிறாா்கள் என நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்  விழிப்புணா்வு ஏற்படுத்துவாா்கள் என்றாா்.

நிகழ்வின்போது லெக்கணாப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் ஆண்டனி, ஆசிரியப் பயிற்றுநா் ராஜா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மணிவேல், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மனோகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT