புதுக்கோட்டை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது வழக்கு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தடை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கக் கால தடை உத்தரவை மீறி, கீரனூா் அருகேயுள்ள திருப்பூா் கடம்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், 7 காளைகள், தலா 10 போ் வீதம் 7 மாடு பிடி வீரா்கள் குழுக்கள் பங்கேற்றனா். இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட பாா்வையாளா்களும் பங்கேற்றனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் அவா்களை விரட்டியடித்தனா். இதைத்தொடா்ந்து, வீரக்குடி கிராம நிா்வாக அலுவலா் முருகலட்சுமி கீரனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கமல்ராஜ் (33), காா்த்திக் (27), முருகேசன் (50), சதீஷ்குமாா் (27) மற்றும் அா்ஜூனன் (52) ஆகியோா் மீது பல்வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT