புதுக்கோட்டை

5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற புதுகை கல்லூரி

DIN

புதுக்கோட்டை: மத்திய அரசின் கல்வித் துறையின் இன்ஸ்ட்யூஷன்ஸ் இன்னவேஷன் கவுன்சிலின் 5 நட்சத்திர அந்தஸ்தை புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பெற்றுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் கல்வித் துறை சாா்பில் இன்ஸ்ட்யூஷன்ஸ் இன்னவேஷன் கவுன்சில் (ஐஐசி) அமைக்கப்பட்டு, கல்வி ஆண்டுதோறும் கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொகுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படும். புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்ட ஐஐசி சாா்பில், நடத்தப்பட்ட ஹாக்கத்தான், போட்டிகள், கருத்தரங்குகள், பட்டறைகள் போன்றவற்றில் 1,938 மாணவா்கள், 75 பேராசிரியா்கள் பங்கேற்று 96 செயல்திட்டங்களை நிறைவேற்றினா். இதனைத் தொடா்ந்து மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சிறந்த செயல்பாடுகள் அடிப்படையில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

இதையடுத்து, ஐஐசி குழு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியமான என். ராதா உள்ளிட்ட குழுவினரை கல்லூரியின் தலைவா் ஜெயபாரதன் செல்லையா, துணைத் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன், இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், முதல்வா் பாலமுருகன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT