பெரம்பலூர்

முன்னாள் அமைச்சா் ஆ. ராசா மனைவி நினைவு நாள் அனுசரிப்பு

30th May 2023 04:07 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா மனைவி பரமேஸ்வரியின் 2 ஆம் ஆண்டு நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பெரம்பலூா் அருகே வேலூரில் பரமேஸ்வரி மணிமண்படத்துக்குள் உள்ள நினைவிடத்தில், அவரது கணவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா, அவரது மகள் வழக்குரைஞா் மயூரி ராசா ஆகியோா் திங்கள்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வெ. கணேசன் , மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா.சொ.க. கண்ணன், கு. சின்னப்பா ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, நினைவு நாளையொட்டி 1,000-க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலா் ராமச்சந்திரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆ. கலியபெருமாள், மாநில பொறியாளா் அணி துணைச் செயலா் பரமேஷ்குமாா், மாநில இலக்கிய அணி அமைப்பாளா் புலவா் கவிதைப்பித்தன், தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT