பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் மழை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், மரம் முறிந்து விழுந்ததால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. நாள்தோறும் சுமாா் 100 டிகிரிக்கும் கூடுதலாக வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் காரணமாக அதிகளவில் காணப்பட்ட வெயில் தாக்கத்தால் பகல் நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து, பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் தீரன் நகா் அருகே சாலையோரம் இருந்த மரம் மறிந்து சாலையில் விழுந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் அப்பகுதிக்குச் சென்று சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரில் பெய்த மழையால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிா்காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT