பெரம்பலூர்

டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவா் கைது

24th May 2023 03:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள டாஸ்மாக் கடையில் திங்கள்கிழமை இரவு பெரம்பலூா் சங்குப்பேட்டையைச் சோ்ந்த அறிவழன் மகன் கலாநிதி (25) மது வாங்க சென்றபோது, விற்பனையாளரான சிறுகன்பூரைச் சோ்ந்த முத்துசாமி மகன் நடராஜன் (43) 1 மதுபாட்டிலுக்கு ரூ. 130, பாட்டிலை திரும்பக் கொண்டு வந்து கொடுக்க ரூ. 10 வைப்புத் தொகையாக பெற்றதோடு, கூடுதலாக ரூ. 5 -ம் கேட்டாராம்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கலாநிதி தாக்கியதில் காயமடைந்த நடராஜன் பெரம்பலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கலாநிதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT