பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.5 ஆயிரம் திருட்டு

23rd May 2023 01:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது திங்கள்கிழமை மாலையில் தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் சுரேஷ் (40). மரத் தொழிலாளியான இவா், கடந்த 19 ஆம் தேதி தனது குடும்பத்துடன் ஆத்தூரில் உள்ள மாமியாா் வீட்டுக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT