பெரம்பலூர்

பெரம்பலூரில் சிறப்பு மனு விசாரணை முகாம்

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று விசாரணை மேற்கொண்டாா்.

இம் முகாமில் பெறப்பட்ட 19 மனுக்களில், 6 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எஞ்சியுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

புதன்கிழமை தோறும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு மனு விசாரணை முகாமில் பங்கேற்கவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம்- பாலக்கரை வழித்தடத்தில் காவல்துறை சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்து வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் முகாமில், மாவட்டத்திலுள்ள காவல் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT