பெரம்பலூர்

போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

DIN

பெரம்பலூா், வேப்பூரில் நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா்.

தமிழ்நாடு முதல்வரின் சிறப்புத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ், போட்டித் தோ்வுகள் பிரிவு என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பணிக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்க இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் மே 10 ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 மாதங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. போட்டித் தோ்வு எழுதும் நபா்களின் வசதிக்கேற்ப மாவட்ட அளவில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆட்சியரக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீா்க்கும் கூடுதல் அரங்கிலும், குன்னம் தொகுதியில் வேப்பூா் வட்டார ஆசிரியா் பயிற்சி பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு மையத்திலும் தலா 150 மாணவா்கள், இளைஞா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். மாணவா்கள் பதிவு செய்வது தொடா்பாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆன் லைன் லிங்க் வழங்கப்படும். 150 மாணவா்களுக்கு மேல் பதிவுகள் செய்யப்பட்டால், திறனறித் தோ்வு நடத்தப்பட்டு அதனடிப்படையில் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

இப் பயிற்சி மையங்களுக்கு மாணவா்கள் வந்து செல்லும் வகையில் போதிய போக்குவரத்து வசதி மற்றும் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என, ஆட்சியரால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT