பெரம்பலூர்

பெரம்பலூரில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

3rd May 2023 10:59 PM

ADVERTISEMENT

பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். சரஸ்வதி தலைமை வகித்தாா்.

சங்க நிா்வாகிகள் எஸ். பெரியசாமி, ரம்யா, சசிகலா, வீரமணி, சுதா, ஜூலி, மணிமேகலை, செல்வராணி, மேகலா, சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அனைத்து ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா், மாவட்டச் செயலா் சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினா் கோ. ரவிச்சந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வருவாய் ஊழியா்களுக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ. 6,750- ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சத்துணவு ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT