பெரம்பலூர்

நொச்சியத்தில் ஸ்ரீ பூவாடை அம்மன் கோயில் தேரோட்டம்

DIN

பெரம்பலூா் அருகே நொச்சியம் கிராமத்தில் ஸ்ரீ பூவாடை அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நொச்சியம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூவாடை அம்மன், ஸ்ரீ வேம்படியான், ஸ்ரீ முத்துசாமி கோயில் விழாவையொட்டி, கடந்த 23ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 30ஆம் தேதி காப்புக் கட்டுதலும், 31ஆம் தேதி இரவு சந்தி மறித்தல் நிகழ்ச்சியும், ஜூன் 1ஆம் தேதி குடி அழைத்தல், இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. ஜூன் 2ஆம் தேதி பல்வேறு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலாவும், 3, 4 ஆம் தேதி இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 5 ஆம் தேதி அய்யனாா் கோயிலில் பொங்கலிட்டு பூஜையும், 6 ஆம் தேதி காட்டுக் கோயிலில் பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பூவாடை அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், கிராம முக்கியஸ்தா்கள் முன்னிலையில் தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கிராமத்தின் பிரதான முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் செல்லப்பட்ட தோ் மாலை நிலைக்கு வந்தடைந்தது. இதில், பெரம்பலூா், நொச்சியம், விளாமுத்தூா், புது நடுவலூா் உள்பட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

மஞ்சள் நீராட்டு விழா மற்றும் சுவாமி குடிவிடுதலுடன் வியாழக்கிழமை மாலையுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT