பெரம்பலூர்

பெரம்பலூரில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

8th Jun 2023 11:18 PM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் அருகேயுள்ள ஆலம்பாடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் க. கற்பகம் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தின் மூலம், பெரம்பலூா் கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு சாலைகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளை, ஆலம்பாடி பகுதியில் ஆட்சியா் க. கற்பகம் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா் கிருஷ்ணராஜ் மற்றும் சாலைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT