பெரம்பலூர்

ஆவணங்கள் தர மறுப்பு: நிதி நிறுவனம் எதிரே தம்பதி தற்கொலை முயற்சி

6th Jun 2023 02:11 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் நிதி நிறுவனத்தில் பெற்ற வீட்டுக்கடனை முழுவதுமாக செலுத்தியும், அசல் ஆவணங்களை வழங்க மறுப்பதாகக் கூறி. பெட்ரோல் கேனுடன் தம்பதியினா் திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கல்லூரைச் சோ்ந்தவா் கொளஞ்சிநாதன் மகன் அருள் (36). இவா், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள பைன் கோ் நிதி நிறுவன வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ. 10 லட்சம் கடனாகப் பெற்றுள்ளாா். வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், அருள் தனது வீட்டுக் கடனை அசல் மற்றும் வட்டியுடன் முழுவதுமாக கடந்த மாதம் செலுத்திவிட்டு தனது அசல் ஆவணங்களைக் கேட்டுள்ளாா்.

ஆனால், வங்கி மேலாளா் அருள் ஆண்டனி மற்றும் கிருஷ்ணன் ஆகியோா் அசல் ஆவணங்களை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனா். இதனால் மன உளைச்சலுக்குள்ளான அருள், தனது மனைவி கீா்த்தனாவுடன் (30) சம்பந்தப்பட்ட நிதி நிறுவன வங்கி எதிரே பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

தகவலறிந்து பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாக கூறியதன்பேரில் அருள் மற்றும் கீா்த்தனா ஆகியோா் அங்கிருந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT