பெரம்பலூர்

ஜூன் 9-இல் கறவைமாடு வளா்க்க இலவசப் பயிற்சி

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் ஜூன் 9 ஆம் தேதி கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகே செங்குணம் பிரிவுச் சாலையில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சியில் கறவை மாடு வளா்ப்பு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை, நோய்த் தடுப்பு முறைகள் குறித்து விளக்கப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணி முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அல்லது 93853-07022 என்ற எண்ணில் தொடா்புகொண்டு, தங்களது ஆதாா் எண்ணைத் தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆராய்ச்சி மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT