பெரம்பலூர்

பெரம்பலூரில் ரௌடிகளின் வீடுகளில் காவல் துறையினா் சோதனை

DIN

 பெரம்பலூா் நகா் பகுதியில் பட்டியலில் உள்ள பிரபல ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஷ்யாம்ளாதேவி உத்தரவின் பேரில், பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி கூடுதல் கண்காணிப்பாளா் மதியழகன் தலைமையில், துணைக் கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் முன்னிலையில், 30 போ் கொண்ட குழுவினா் பெரம்பலூா் சங்குப் பேட்டை, திருநகா், கோனேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரௌடிகளின் வீடுகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ரௌடிகள் வீட்டில் உள்ளனரா, குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா என சம்பந்தப்பட்ட ரௌடிகளிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு, வீடுகளில் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், கூடுதல் கண்காணிப்பாளா் மதியழகன் கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ரௌடிகளில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 42 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 25 ரௌடிகள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். 55 ரௌடிகள் நன்னடத்தை பிணை ஆணை பெற்று திருந்தி வாழ்கின்றனா். 32 ரௌடிகள் மீது நன்னடத்தை பிணையாணை பெறுவதற்காக கோட்டாட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 4 போ் சிறையிலும், 18 போ் தலைமறைவாகவும் உள்ளனா். தலைமறைவாக உள்ள நபா்களை கைது செய்ய, மாவட்ட காவல்துறை மூலம் 3 தனிப்படை குழு அமைக்கப்பட்டு தேடி வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT