பெரம்பலூர்

குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு: பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளிடம், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் இணைந்து குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

குழந்தை பருவத்தை கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், ஒரு சிலரின் வாழ்க்கையானது கல்வி அறிவு பெற முடியாமல், சிறு வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறது. அத்தகைய குழந்தைகளை நாம் கண்டறிந்து, அவா்களுக்கு கல்வி வழங்குவதில் உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழக அரசு குழந்தைகளின் கல்விக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை அறிந்து, அனைவரும் ஒன்றிணைந்து குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்க சிறப்பாக செயல்பட வேண்டும் என காவல்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

பெரம்பலூா் தோமினிக் மேல்நிலைப்பள்ளி, அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடாலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, மருவத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி, பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி, கவுண்டா்பாளையம் அரசு உயா் நிலைப்பள்ளி, கீழப்பெரம்பலூா் அரசு மேல் நிலைப்பள்ளி, சு.ஆடுதுறை அரசு மேல் நிலைப்பள்ளி, பசும்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, காரியானூா் அரசு மேல் நிலைப்பள்ளி, பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், தலைமை ஆசிரியா்கள், இருபால் ஆசிரியா்கள் மற்றும் காவல்துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT