பெரம்பலூர்

பெரம்பலூா் மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் வேந்தா் அ. சீனிவாசன், கல்லூரியின் 2 ஆண்டுக்கான இதழான எனிக்மா என்னும் ஆய்விதழையும், தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் ந. கல்யாணி எழுதிய முழு நிலவு என்னும் தமிழ் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டாா்.

தொடா்ந்து, சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் அ. துளசி, திருச்சி ராநா மருத்துவமனை இருதய நோய் தலைமை மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி, திருச்சி மாளுருவாக்கம் தாய்- சேய் மைய மருத்துவ விஞ்ஞானி தே. அவினாஷ் காந்தி ஆகியோா் புற்றுநோய்க்கான காரணங்கள், அதற்கான சிகிச்சை, கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினா்.

தொடா்ந்து, மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா எழுதிய மனித உடலியல் பாடப் புத்தகம் என்னும் நூலை, அறிவியல் துறை பேராசிரியா்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், மகளிா் கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா, இதர கல்லூரி முதல்வா்கள், புல முதன்மையா்கள், அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, உயிா் தொழில்நுட்பவியல் துறைத் தலைவா் வு. ஷீலா வரவேற்றாா். நிறைவாக, உயிா் வேதியியல் துறைத் தலைவா் மை. சுஜித்ரா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT