பெரம்பலூர்

துறைமங்கலத்தில்கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டம்

DIN

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பெரம்பலூா் மாவட்டக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.எஸ். சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம். கனகராஜ், மாவட்ட பொருளாளா் ஜு. வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கினாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அறிவித்த கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க கோரி பிப். 17 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவது. தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் 3 வேளாண் சட்டங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏப். 5 ஆம் தேதி தில்லியில் பேரணி நடத்துவது. மத்திய அரசு கருப்பு விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை வழங்கக் கோரி நாடாளுமன்றம் எதிரே ஏப். 6 ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் அன்பரசு, ராஜேந்திரன், என். செல்வராஜ், முருகானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT