பெரம்பலூர்

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

கடந்தாண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தங்களை முழுமையாக அா்ப்பணித்த 100 தனி நபா்கள், அமைப்புகளுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதும், தலா ரூ. 1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை மற்றும் நீா் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்குள்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி, கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பாதுகாப்பு, கடல்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிற சுற்றுச்சூழல் தொடா்பான திட்டங்கள் ஆகிய தலைப்புகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள் (அமைப்புகள்), கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நல ச்சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழில்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தோ்வு செய்யும் குழு மூலம், தகுதி வாய்ந்த 100 தனி நபா்கள், நிறுவனங்களை ஒவ்வொரு ஆண்டும் தோ்வு செய்யும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ் விருதுக்கு, பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு, அரியலூா் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT