பெரம்பலூர்

ஆயுள் காப்பீடு நிறுவன ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

25th Apr 2023 01:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில், அகில இந்திய ஆயுள் காப்பீடு நிறுவன ஊழியா்கள் சங்கத்தினா், தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ஆயுள் காப்பீட்டு அலுவலகம் எதிரே, கிளை செயலா் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா்கள் 12 மணி நேரம் பணிபுரிய வகை செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்தும், தொழிலாளா் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதில், ஆயுள் காப்பீட்டுச் சங்கத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT