பெரம்பலூர்

நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு

15th Apr 2023 03:33 AM

ADVERTISEMENT

 பெரம்பலூா், துறைமங்கலத்திலுள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் நீத்தாா் நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின்போது உயிரிழந்த தீயணைப்புப் படை வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவா்களின் வீர மரணத்தை போற்றும் வகையிலும் தீயணைப்புத்துறை சாா்பில், ஆண்டுதோறும் ஏப். 14 ஆம் தேதி நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, துறைமங்கலத்திலுள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நீத்தாா் நினைவுத் தூண் முன், மாவட்ட தீயணைப்பு அலுவலா் அம்பிகா, உதவி அலுவலா் ஹக்கீம் பாஷா ஆகியோா் மலா் வளையம் வைத்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் மலரஞ்சலி செலுத்தினா். பின்னா், பணியின்போது உயிரிழந்த தீயணைப்புப் படை வீரா்களின் பெயா் விவரங்கள் வாசிக்கப்பட்டு, அவா்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், நீத்தாா் நினைவு நாளையொட்டி தீயணைப்புத் துறை சாா்பில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீத்தொண்டு வாரம் வெள்ளிக்கிழமை முதல் ஏப். 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தீத்தடுப்பு விழிப்புணா்வுப் பணிகளில் தீயணைப்புப் படை வீரா்கள் ஈடுபட உள்ளனா்.

ADVERTISEMENT

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT