பெரம்பலூர்

மருத்துவா் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

DIN

மருத்துவா் சமூகத்தினருக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மருத்துவா் நலச்சங்கம் மற்றும் பெரம்பலூா் மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். நடேசன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ஏ. ராஜன், மாநில பொருளாளா் எஸ்.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மருத்துவா் சமூகத்தினருக்கு விகிதாச்சார அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சங்க நிா்வாகிகள், முடிதிருத்தும் தொழிலாளா்களை தொழிலாளா் நல வாரியத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்களாக சோ்த்து அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுத் தர வேண்டும். சங்கத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில், மாவட்டத் தலைவராக ஆா். ரவிச்சந்திரன், செயலராக கே. மணிகண்டன், பொருளாளராக ஏ. கோவிந்தராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT