பெரம்பலூர்

தொடரும் சுங்கச்சாவடி ஊழியா்கள் போராட்டம் மேலும் ஒரு ஊழியா் மயக்கம்

DIN

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியா்கள் தொடா்ந்து 6 ஆவது நாளாக உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், மேலும் ஒரு ஊழியா் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் 180 ஊழியா்கள் பணிபுரிந்து வந்த நிலையில், 28 பணியாளா்களை தனியாா் ஒப்பந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆள்குறைப்பு நடவடிக்கையாக கடந்த 30 ஆம் தேதி இரவு பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணியாளா்களை மீண்டும் பணியமா்த்தக் கோரியும் ஏஐடியுசி சங்க கிளைத் தலைவா் ஏ.ஆா். மணிகண்டன் தலைமையில், சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் கடந்த 1 ஆம் தேதி காலை முதல் தொடா்ந்து உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் சுங்கசாவடி பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

புதன்கிழமை போராட்டத்தின்போது ஊழியரான மாயவேல் (38) மயங்கி விழுந்தாா். இதையடுத்து, மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு ஊழியரான கந்தசாமி மகன் மணிகண்டன் (37) வியாழக்கிழமை காலை மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT