பெரம்பலூர்

காகித பைகள், பொம்மை தயாரித்தல் இலவச பயிற்சி பெற அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு காகித பைகள், பொம்மை தயாரித்தல் மற்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன் தயாரிப்பது தொடா்பான இலவச பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மூலம் காகித பைகள், பொம்மை தயாரித்தல் மற்றும் பெண்களுக்கான ஆடை அணிகலன் தயாரித்தல் இலவச பயிற்சி அக். 12 ஆம் தேதி முதல் அளிக்கப்படுகிறது.

தொடா்ந்து 13 நாள்களுக்கு நடைபெறும் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அளிக்கப்படும். பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்,

விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதியை குறிப்பிட்டு, தேவையான ஆவணங்களுடன் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT