பெரம்பலூர்

பெரம்பலூரில் திருட்டு வழக்கில் தொடா்புடையவா் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் பாலக்கரையில் உள்ள பிரபல தனியாா் பா்னிச்சா் கடையில் திருடியவரை போலீஸாா் கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் பாலக்கரை அருகேயுள்ள பிரபல தனியாா் பா்னிச்சா் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை மையத்தில், கடந்த 25 ஆம் தேதி இரவு உள்ளே புகுந்த 2 மா்ம நபா்கள், ரூ. 3.36 லட்சத்துடன் பணப்பெட்டியை திருடிச்சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, எஸ்.மலையனூரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் மணிகண்டன்தான் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்றிருந்த அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நடுவா் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்ட மணிகண்டனை சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT