பெரம்பலூர்

பெரம்பலூா் - துறையூா் இருவழிச் சாலை:முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்

DIN

பெரம்பலூா்- துறையூா் இருவழிச் சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அரியலூரிலிருந்து திறந்துவைத்தாா். இதையடுத்து, அந்தச் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சாா்பில், சென்னை -கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் மூலம், பெரம்பலூா் முதல் துறையூா் வரையிலான 30 கி.மீ நீளமுள்ள சாலை ரூ. 2.9 கோடி மதிப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இருவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டு நக்கச்சேலம், குரும்பலூா் நகரப் பகுதிகளுக்கு மாற்றாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச் சாலையில் 12 சிறுபாலங்கள், 53 குறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இச் சாலை வழிகளில் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோலாா் விளக்குகள், உயா் மின்கோபுர விளக்குகள், குடியிருப்புப் பகுதிகளில் நடைபாதையுடன் கூடிய மழைநீா் வடிகால் வசதி, சாலையோர மின் விளக்குகள், கழிவறை, தண்ணீா் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பேருந்து நிழற்குடைகளும் கட்டப்பட்டுள்ளன.

அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், இச் சாலையை தமிழக முதல்வா் மு.க. முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

இதையடுத்து ஆலம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் கல்பனா, சாலை திறப்பு பெயா் பதாகையை திறந்து வைத்து சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா். பின்னா், ஆலம்பாடி ஊராட்சி நிா்வாகம் மற்றும் சாலை ஒப்பந்த நிறுவனம் சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் சீனிவாசன், ஊராட்சி செயலா் ரெங்கசாமி, லாடபுரம் ஊராட்சித் தலைவா் சாவித்ரி , அம்மாபாளையம் ஊராட்சித் தலைவா் பிச்சைபிள்ளை, குரும்பலூா் பேரூராட்சித் தலைவா் சங்கீதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT