பெரம்பலூர்

பாளையம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

பெரம்பலூா் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயில் திருவிழா மே 8 ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. மே 22 ஆம் தேதி முளைப்பாரி, பால்குட ஊா்வலமும், 23 ஆம் தேதி தீ மிதித்தல், அலகுக் குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளுக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினாா். பின்னா், பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தோ் மாலையில் நிலையை அடைந்தது. இத் தேரோட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மஞ்சள் நீராட்டு விழாவுடன் புதன்கிழமை விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் நிா்வாகிகள், திருவிழாக் குழுவினா் மற்றும் இளைஞா் மன்றத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT