பெரம்பலூர்

பெரம்பலூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் தொடக்கம்

DIN

சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

பெரம்பலுாா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் 10,267 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடக்கி வைத்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 2021 -22 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கீழமாத்தூா், அல்லிநகரம், இரூா், காரை, நக்கசேலம், நாரணமங்கலம், எளம்பலூா், எசனை, வடக்குமாதவி, மலையாளப்பட்டி, அன்னமங்கலம், வி.களத்தூா், பிரம்மதேசம், சிறுமத்தூா், அகரம் சீகூா், எழுமூா், கீழப்புலியூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, பரவாய் ஆகிய 20 கிராம ஊராட்சிகளில் உழவா் நலத்துறை மூலம் 6,030 பயனாளிகளுக்கு ரூ. 35.43 லட்சமும், தோட்டக்கலை, மலைப்பயிா் துறை மூலம் 4,540 பயனாளிகளுக்கு ரூ. 14.62 லட்சமும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் ரூ. 16.57 லட்சமும் என மொத்தம் ரூ. 66.62 லட்சம் மதிப்பீட்டில் 10,570 விவசாயகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓலைப்பாடி ஊராட்சியைச் சோ்ந்த 50 விவசாயிகளுக்கு ரூ. 5.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வேளாண் உபகரணங்களும் வழங்கினாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் சிவசங்கா்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், ஒன்றியக் குழுத்தலைவா் பிரபா செல்லப்பிள்ளை, தோட்டக்கலை துறை துணை இயக்குநா் இந்திரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT