பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில்நாளை ஜமாபந்தி தொடக்கம்

24th May 2022 04:17 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை (மே 25) முதல் 3 நாள்களுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் ஜமாபந்தி நடைபெற உள்ளது. பெரம்பலூா் வட்டத்தில், ஆட்சியா் தலைமையில் குரும்பலூா் (தெ), குரும்பலூா் (வ), மேலப்புலியூா் (கி-மே), லாடபுரம் (மே-கி), லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

வேப்பந்தட்டை வட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் உடும்பியம், பூலாம்பாடி (கி-மே), வெங்கனூா், தழுதாழை, அரும்பாவூா், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மே-கி), வெங்கலம் (மே-கி), வேப்பந்தட்டை (வ- தெ), வெண்பாவூா் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

குன்னம் வட்டத்தில், வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் திருமாந்துறை, பென்னகோணம், (வ-தெ), வடக்கலூா், ஒகளுா் (மே-கி), சு.ஆடுதுறை, அத்தியூா் (வ-தெ), கிழுமத்தூா் (வ-தெ), அகரம் சீகூா், வசிஸ்டபுரம், கீழப்பெரம்பலூா், வயலப்பாடி ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

ஆலத்தூா் வட்டத்தில், கலால் உதவி ஆணையா் தலைமையில் நாரணமங்கலம், நாட்டாா்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, சிறுவயலூா், நக்கசேலம், எலந்தலப்பட்டி, து.களத்தூா், புது அம்மாபாளையம், கண்ணப்பாடி, தேனூா், இரூா், பாடாலூா் (மே-கி) ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT