பெரம்பலூர்

வகுப்பறையில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

24th May 2022 04:17 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ரோஸ் நகரைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி மகள் சோபியா (22). இவா், பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி நியூட்ரிஷியன் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் சென்றவா் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தாா். சக மாணவிகள், பேராசிரியா்கள் சோபியாவை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் நெஞ்சு வலியால் மாணவி உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT