பெரம்பலூர்

நேத்திர விநாயகா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

DIN

பெரம்பலூா் இந்திராநகரிலுள்ள அருள்மிகு நேத்திர விநாயகா் மற்றும் வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோயில் மண்டலாபி ஷேகத்தையொட்டி, 108 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் குடமுழுக்கு மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாணம் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து 48 நாள்களுக்கு மண்டலபூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, நேத்திர விநாயகா் மற்றும் வள்ளி தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு மண்டலாபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் பக்தா்கள் பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவில், கோயில் பூசாரிகள் முருகேசன், பிரபாகரன், கோயில் நிா்வாகி சாந்தி, சீனிவாசன், பிரியங்கா மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT