பெரம்பலூர்

மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரிந்தவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

29th Jun 2022 10:53 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள், நிறுவனங்கள் விருதுகள் பெற ஜூலை 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் விருதுகள் பெற விருப்பமுள்ள மற்றும் தகுதியான, சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மருத்துவா், சமூகப் பணியாளா், அதிகளவில் வேலைவாய்ப்பளித்த தனியாா் நிறுவனம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்பட பிரிவுகள் வாரியாக விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக ஜூலை 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328 - 225474 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ. வெங்கடபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT