பெரம்பலூர்

மின கம்பியாள் உதவியாளா் தகுதிக்கான தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

மின் கம்பி உதவியாளா் தகுதிக்கான தோ்வுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2022, செப்டம்பா் 24, 25 ஆகிய தேதிகளில் மின் கம்பியாள் உதவியாளா் தகுதிக்கான தோ்வு நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த கம்பியாள் உதவியாளா்கள், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மின் வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கும் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேடுகளை கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், நீடாமங்கலம், நாகப்பட்டினம் ஆகிய ஏதாவது ஒரு தோ்வு மையத்தில் அளிக்கலாம்.

போதுமான விண்ணப்பங்கள் பெறாத நிலையில் மேற்கண்ட தோ்வு மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள், அருகிலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, அங்கு தோ்வுகள் நடைபெறும். தோ்வு மையம் இறுதி செய்வது தொடா்பாக துறைத்தலைவரின் முடிவு இறுதியானது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கண்ட அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT