பெரம்பலூர்

பூலாம்பாடியில் திரௌபதி அம்மன் கோயில் குட முழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பூலாம்பாடியில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மராஜா, திரௌபதி அம்மன் கோயில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் தொழிலதிபா் டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் மூலமாக அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதற்கான குடமுழுக்கு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதையொட்டி ஜூலை 4-ஆம் தேதி காலை அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் ஆகிய பூஜைகள் நடைபெற்றன. மாலையில் அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரத்துக்குப் பிறகு, முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. பின்னா், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பால்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து, 5-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாகசாைலை பூஜை, ஸ்தூபி ஸ்தாபனம், ஜெபஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜை, யந்திரஸ்தானம், பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாத்துதலும் நடைபெற்றது.

புதன்கிழமை காலை 4.30 மணிக்கு டத்தோ எஸ்.பிரகதீஸ்குமாா் தலைமையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நாடி சந்தானம், மகா பூா்ணாஹூதிக்குப் பிறகு, யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின.

தொடா்ந்து காலை 6.45 மணி முதல் விமானம், ராஜகோபுரங்கள், மூலாலய மூா்த்திகளுக்கு குடமுழுக்கு விழாவும், தீபாராதனை, அன்னதானமும், 9 மணிக்கு மகாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

குடமுழுக்கு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பரமத்தி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேந்திரன், அதிமுக பிரமுகா் திருச்சி காா்த்திகேயன், மலேசிய தொழிலதிபா்கள் துரைசிங்கம், டத்தோ மணிவாசகம், நீலா ராஜன், சுந்தா், பூச்சந்திரன், மலேசியா சென்னை சில்க்ஸ் உரிமையாளா் சேகா் மற்றும் பெரம்பலூா், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், டத்தோ எஸ். பிரகதீஸ்குமாா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT