பெரம்பலூர்

ஆலங்குடியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

25th Jan 2022 04:08 AM

ADVERTISEMENT

ஆலங்குடி - மறமடக்கி இடையே புதிய வழித்தட பேருந்து சேவையை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆலங்குடி பேருந்து நிலையத்தில் புதிய வழித்தட சேவையை தொடங்கி வைத்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து வசதி இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஆலங்குடி பேருந்துநிலையத்தில், ஆலங்குடி முதல் மறமடக்கி வரை செல்லும் புதிய வழித்தடப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து, ஆலங்குடியிருந்து காலை 8.55 மணிக்கு புறப்பட்டு அரையப்பட்டி, மறமடக்கி பள்ளி வழியாக மறமடக்கியை சென்றடையும். மேலும் மறமடக்கியிலிருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு மீண்டும் ஆலங்குடியை வந்தடையும்.எனவே இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில், அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக மேலாண் இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்மோகன், புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் இளங்கோவன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT