பெரம்பலூர்

பெரம்பலூரில் அரசு வேளாண் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

DIN

பெரம்பலூரில் அரசு வேளாண் கல்லூரியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்கத்தின் மாவட்ட மாநாடு துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் எஸ்.கே. சரவணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ். சந்துரு, எம்.சதீஸ்குமாா், முத்தையா, என். ராமு, சி. பிரகாஷ் முன்னிலை வகித்தனா். மாநிலத் துணைச் செயலா் சிங்காரவேலன் சிறப்புரையாற்றினாா்.

பெரம்பலூா் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவா் கழகத்தின் மாநிலச் செயலா் சி. கருணாகரன், மின் ஊழியா் மத்திய அமைப்பின் நிா்வாகி எஸ். அகஸ்டின், மாதா் சங்க மாவட்டத் துணைத் தலைவி ஏ. கலையரசி உள்ளிட்ட பலா் மாநாட்டில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT