பெரம்பலூர்

ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்: நெல்லை முபாரக்

DIN

சட்டப்பேரவைக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, அக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

பாபா் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பா் 6-ஆம் நாளை பாசிச எதிா்ப்பு தினமாக அனுசரித்து, நாடு முழுவதும் அறவழிப் போராட்டத்தை நடத்துகிறோம்.

தமிழக ஆளுநா் மறைமுகமாக அரசுக்கு இணையாக ஒரு இணை அரசாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறாா். மிகப்பெரிய குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாா். தமிழக அரசாலை நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஜனநாயக படுகொலையை நடத்திக் கொண்டிருக்கிறாா். ஆளுநரின் இந்த நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக மக்களின் நலனுக்காக, ஏழரை கோடி மக்களின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம்புரிந்த அனைத்து அலுவலா்களும் சட்டப்படி பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.

பெரம்பலூா் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டும். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில், தண்ணீா் பந்தல் பகுதியில் விபத்துகளை தடுக்கும் விதமாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். லப்பைக்குடிகாடு பகுதியில் 1977 முதல் கிடப்பிலுள்ள கழிவுநீா் வடிகால் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, அப்பகுதி மக்கள் சுகாதாரத்துடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT