பெரம்பலூர்

திருப்பெயரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள திருப்பெயா் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அம்மாபாளையம் கால்நடை மருந்தகம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சுரேஷ் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். உதவி இயக்குநா் குணசேகா் முன்னிலை வகித்தாா்.

கால்நடை மருத்துவா்கள்செந்தில்குமாா் பாலமுருகன், மூக்கன் ஜவஹா், முத்துசெல்வம், கலியபெருமாள், கால்நடை ஆய்வாளா் சித்ரா, மணி, பராமரிப்பு உதவியாளா்கள் ஞானேஸ்வரி வாசுகி, குப்புசாமி ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் கால்நடைகளுக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனா்.

இதில், பொது மக்கள் தங்களது 956-க்கும் மேற்பட்ட கால்நடைகள், கோழிகள், செல்லப் பிராணிகளுக்கு சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டன. மேலும், 3 சிறந்த கிடேரி கன்றுகளுக்கு ஊக்கப் பரிசும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை கையாண்டு வரும் 3 விவசாயிகளுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT